வாலிபர் கைது; மோட்டார்சைக்கிள் பறிமுதல்

பழனியில் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-29 19:00 GMT

பழனி பெரியபள்ளிவாசல் பகுதியில் கடந்த 19-ந்தேதி ரேஷன் அரிசி கடத்துவதாக வருவாய்த்துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மூட்டைகளுடன் 2 பேர் வந்தனர். அவர்கள் அதிகாரிகளை கண்டதும் மூட்டைகளை போட்டுவிட்டு தப்பி சென்றனர். பின்னர் அதிகாரிகள் மூட்டைகளை கைப்பற்றினர். அதில் 160 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்றது பழனி மதினா நகரை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (வயது 23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய யாசின் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்