காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரியை அடுத்த ஓட்டப்பட்டியை சேர்ந்தவர் புவியரசன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் நெடுங்கலை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரை பார்ப்பதற்காக கடந்த 11-ந் தேதி இரவு அவரது வீட்டிற்கு புவியரசன் சென்றார். அப்போது அந்த பெண்ணின் உறவினர்கள் புவியரசனை வழிமறித்து இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக புவியரசன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நெடுங்கல் பகுதியை சேர்ந்த சண்முகம் (40), வேடிகொட்டாய் திருப்பதி (20), பேருஅள்ளி இளங்குமரன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.