சாராயம் விற்றவர் சிக்கினார்

கெங்கவல்லியில் சாராயம் விற்றவர் போலீசில் சிக்கினார்.

Update: 2023-05-30 19:18 GMT

கெங்கவல்லி

கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் மற்றும் போலீசார் 74 கிருஷ்ணாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்மம்பட்டியில் இருந்து கெங்கவல்லி செல்லும் சாலையில் சோளக்காட்டில் லாரி டியூப்பில் 110 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் 74 கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஸ்ரீமணி மலைராஜன் (வயது 25) சோளக்காட்டில் பதுக்கி வைத்து சாராயத்தை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஸ்ரீமணி மலைராஜனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்