லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மோகனூரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-04 18:45 GMT

மோகனூர்

மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் தலைமையில் போலீசாா் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்புத்தூர் சாலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மோகனூர் முத்துராஜா தெருவை சேர்ந்த கனகரத்தினம் (வயது 50) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்