அரூர் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

Update: 2023-05-03 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன ராமன் (வயது 63). தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சின்ன ராமன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய மாணிக்கம் (55), சுப்பிரமணி (60) ஆகியோர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக சின்ன ராமன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கம், சுப்பிரமணி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்