நிதி நிறுவனத்தில் பணம் திருடிய பெண் தூய்மை பணியாளர் கைது

நிதி நிறுவனத்தில் பணம் திருடிய பெண் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-29 18:45 GMT

ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சரத்குமார் நிதிநிறுவன பணத்தினை வாடிக்கையாளர்களிடம் சேகரித்து வந்துள்ளார். அந்த பணம் ரூ.24 ஆயிரத்து 790-ஐ அங்குள்ள அறையில் வைத்து விட்டு மேலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அங்கு வேலை செய்த தூய்மை பணியாளரான காட்டுப்பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி வாசுகி (வயது 38) பணம் திருடியதை ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்