பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி பள்ளிக்கு செல்லும் போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் பாலக்கோடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.