வீட்டில் பதுக்கி சாராயம் விற்றவர் கைது

வீட்டில் பதுக்கி சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-18 22:30 GMT

கெங்கவல்லி:

கெங்கவல்லி பேரூராட்சி இந்திரா காலனி பகுதியில் கெங்கவல்லி ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் சாராயம் பதுக்கி விற்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 60 லிட்டர் சாராயம் இருந்தது. இதைத்தொடர்ந்து வீட்டில் சாராயத்தை பதுக்கி விற்ற அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்