போக்சோ வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2023-02-01 18:45 GMT

ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் முருகேசனை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் முருகேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று முருகேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதையடுத்து ஏரியூர் போலீசார், முருகேசனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்