அன்னதானப்பட்டியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

அன்னதானப்பட்டியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-09 21:37 GMT

அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் 4 மாத கர்ப்பத்துடன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது அவருடன் பழகிய ஆகாஷ் (19) என்பவர் சிறுமியை கர்ப்பமாக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்