சேலம் அருகே 9 டன் இரும்பு கம்பி திருடிய 3 பேர் கைது

சேலம் அருகே 9 டன் இரும்பு கம்பி திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-31 21:55 GMT

இளம்பிள்ளையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வீரபாண்டி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பெரிய நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. திருப்பூரை சேர்ந்த ரஞ்சித்குமரன் என்பவர் இந்த கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளார். குழாய் பதிக்கும் பணிக்காக புதுச்சேரியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரிகளில் இரும்பு கம்பிகள் கொண்டு வரப்பட்டன. அப்போது, 9 டன் இரும்பு கம்பிகள் திருட்டுபோனதாக சூரமங்கலம் போலீசில் ரஞ்சித்குமரன் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கந்தவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியில் வேலை செய்து வந்த மதுரையை சேர்ந்த முத்துவேல் (வயது 37), தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஆனந்தராஜ், சங்ககிரி வைகுந்தம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) ஆகிய 3 பேரும் 9 டன் இரும்பு கம்பிகளை திருடியிருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து முத்துவேல் உள்பட 3 பேரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்