பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து நகை திருடிய பெண் கைது

பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-26 22:23 GMT

பெத்தநாயக்கன்பாளையம்:

பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா எடப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் வீட்டில் கடந்த 10-ந் தேதி அன்று 7 பவுன் நகை காணாமல் போனது. அதே போல் செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னதுரை என்பவரது வீட்டில் 18-ந் தேதி அன்று 5 பவுன் நகை திருட்டு போனது. மேலும் ஏத்தாப்பூர் பாண்டியன் என்பவர் வீட்டில் 19 பவுன் நகையும், ஏத்தாப்பூர் கே.எஸ்.ஆர். நகர் பகுதியில் 3 பவுன் நகையும் திருட்டு போனது. அடுத்தடுத்து இந்த வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறியது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகே செக்கடிப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய ஒரு பெண்ணிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர், சேலம் அம்மாபேட்டை பண்டிதர் தெருவை சேர்ந்த காந்திமதி (வயது 45) என தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு அங்கு வீட்டின் சாவியை வெளியில் எங்கு வைத்துள்ளனர் என்பதை தேடி கண்டுபிடித்து வீடுகளில் புகுந்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 24 பவுன் திருட்டு நகைகளை மீட்டனர். மேலும் மீதமுள்ள 9 பவுன் நகையை உடையாப்பட்டியில் உள்ள வங்கியில் நகைக்கடன் பெற்று இருப்பதாக போலீசாரிடம் கூறி உள்ளார். அந்த நகையை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்