சின்னத்திருப்பதியில் மூதாட்டி கொலை வழக்கில் தாய், 3 மகள்கள் கைது

சின்னத்திருப்பதியில் நடந்த மூதாட்டி கொலை வழக்கில் தாய், 3 மகள்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-19 22:59 GMT

கன்னங்குறிச்சி:

மூதாட்டியிடம் நகை கொள்ளை

சின்னத்திருப்பதி பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ஹபீஸ்கான். நெடுஞ்சாலைதுறையில் மண்டல பொறியாளராக பணிபுரிந்த இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி நசீர் ஜஹான் (வயது 82). கடந்த மாதம் 4-ந் தேதி இவர் வீட்டில் தனியாக இருந்தபோது 2 பேர் வீடு வாடகைக்கு கேட்பது போல் உள்ளே புகுந்து 15½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த முஸ்தபா (27), அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை வழக்கு

இந்தநிலையில் நசீர்ஜஹான் கடந்த மாதம் 14-ந் தேதி இறந்துவிட்டதால் கன்னங்குறிச்சி போலீசார் கொள்ளை வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கைதானவர்களிடம் இருந்து மூதாட்டியின் நகைகளை மீட்கவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் சிறையில் இருந்த முஸ்தபா மற்றும் ராஜேந்திரன் ஆகிய 2 பேரையும் 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

தாய், 3 மகள்கள் கைது

இதில் முஸ்தபாவின் தாயார் மற்றும் அக்காள், நசீர் ஜஹானின் வீட்டில் வேலை செய்துவந்ததாகவும், அவர்களை அழைக்க வரும்போது மூதாட்டியை கண்காணித்து கொள்ளையடித்ததாகவும் கைதான 2 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில், முஸ்தபாவின் தாயார் முஸ்தரின்ஜான் (60), அக்காள்கள் ஜாகின்பானு (40), குடுமா (32) ஆபிதா (28) ஆகிய 4 பேரின் பெயரை சேர்த்ததுடன், அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்