கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த நிலையில் பட்டதாரி பெண்ணை திருமணம் செய்ய மறுத்த பொக்லைன் ஆபரேட்டர் கைது

கத்திமுனையில் மிரட்டி கற்பழித்த நிலையில் பட்டதாரி பெண்ணை திருமணம் செய்ய மறுத்த பொக்லைன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-10-31 02:46 IST

மேச்சேரி:

மேச்சேரி அருகே கூனாண்டியூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த 24 வயது முதுகலை பட்டதாரி பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டரான சுபாஷ் சந்திரபோஸ் (வயது 27) என்பவர் ஒரு தலையாக காதலித்து பெண் கேட்டு சென்றுள்ளார். அவர் மறுக்கவே ஆத்திரம் அடைந்த பொக்லைன் ஆபரேட்டர் கடந்த ஜனவரி மாதம் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது வீட்டுக்குள் சென்று கதவை பூட்டி கத்தி முனையில் அந்த பெண்ைண பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியே கூறினால்கொன்று விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 5-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தனக்கு வாழ்வு அளிக்குமாறு சுபாஷ் சந்திரபோசிடம்கேட்ட போது, அவரும், அவருடைய தந்தை சின்னண்ணன், தாயார் நல்லம்மாள் மற்றும்கோவிந்தன் ஆகியோர் திருமணம்செய்யுமாறு இங்கு வந்தால் குடும்பத்தோடு கொன்று புதைத்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இது குறித்து அந்த பெண் மேச்சேரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், சுபாஷ் சந்திரபோஸ், அவரது பெற்றோர் மற்றும் கோவிந்தன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் சுபாஷ் சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்