நாமக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
நாமக்கல்லில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
நாமக்கல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் கொசவம்பட்டி 4 ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் என்.கொசவம்பட்டியை சேர்ந்த பூவரசன் (வயது 22), ரெட்டிப்பட்டி பிரவீன்குமார் (26) என்பது தெரியவந்தது. பூவரசன் தனது கையில் கத்தி வைத்து இருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்தபோது, அந்த வழியாக வரும் நபர்களிடம் கத்திமுனையில் பணம் பறிக்க திட்டம் தீட்டி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.