மினி லாரியில் குட்கா கடத்தல்-டிரைவர் கைது

Update:2022-10-11 00:15 IST

நல்லம்பள்ளி:

தொப்பூர் குறிஞ்சிநகர் சுங்கச்சாவடி அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தக்காளி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் ரகசிய அறை அமைத்து 326 கிலோ குட்கா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியுடன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரான திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகனை (வயது 27) கைது செய்தனர்.

மேலும் செய்திகள்