சேலத்தில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

சேலத்தில் குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-05 20:47 GMT

சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் ஜீசஸ் (வயது 35). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட, போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து ஜீசசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அதிகாரிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்