லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Update: 2022-10-03 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று காலை பையர்நத்தம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பையர்நத்தம் பகுதியை சேர்ந்த செந்தூரான் (வயது 30) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டாரி சீட்டு விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து செந்தூரானை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மனலூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (42) என்பவர் பொம்மிடி பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரமேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்