பாண்டமங்கலம் அருகே 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

பாண்டமங்கலம் அருகே 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

Update: 2022-09-24 18:45 GMT

பரமத்திவேலூர்:

பாண்டமங்கலம் அருகே வெங்கரை பஸ் நிறுத்த பகுதியில் நேற்று நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் சரக்கு ஆட்டோவில் 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி வந்த மோகனூர் தாலுகா கீழ்பாலபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன்‌ ரஞ்சித்குமார் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்