கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது

கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-11 20:55 GMT

சேலம் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு விநாயகர் கோவில் உள்ளது. இங்கு உண்டியலை உடைத்து ஒருவர் பணம் திருடுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் நாமக்கல்லை சேர்ந்த முருகேசன் (வயது 50) என்பதும், பணம் திருடியதையும் ஒப்புக்கொண்டார். மேலும் நோய் வாய்ப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்ததும், செலவுக்கு பணம் இல்லாததால் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்