ஏரியில் மண் கடத்தல்; 4 பேர் கைது
ஏரியில் மண் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைவாசல்:
தலைவாசல் பஸ் நிலையம் அருகே உள்ள ஏரியில் டிராக்டரில் மண் கடத்தப்படுவதாக தலைவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே தலைவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று டிராக்டரில் மண் அள்ளி கொட்டி கொண்டிருந்த எந்திரம், மண் ஏற்றி தயார் நிலையில் இருந்த 3 டிராக்டர் டிப்பர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மண் கடத்தல் தொடர்பாக, மண் வெட்டும் எந்திரத்தின் டிரைவரான விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவமணி (வயது 32) மற்றும் டிராக்டர் டிரைவர்களான தலைவாசல் தாலுகா பட்டுதுறை கிராமத்தை சேர்ந்த சரவணன் (47), செல்வம் (33), மும்முடி கிராமத்தை சேர்ந்த பூபதி (47) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.