ஆத்தூர் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
ஆத்தூர் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சூர்யா (வயது 22). தொழிலாளி. இவர் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து, திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கி உள்ளார். பின்னர் கர்ப்பத்தை கலைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் கர்ப்பத்தை கலைத்து உள்ளார். ஆனால் சூர்யா திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை கைது செய்தனர்.