விஷம் குடித்து தொழிலாளி சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக ஓட்டல் உரிமையாளர் கைது

விஷம் குடித்து ஓட்டல் தொழிலாளி இறந்தது தொடர்பான வழக்கில் ஓட்டல் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-05 19:48 GMT

விஷம் குடித்து ஓட்டல் தொழிலாளி இறந்தது தொடர்பான வழக்கில் ஓட்டல் உரிமையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கைது செய்தனர்.

ஓட்டல் தொழிலாளி சாவு

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது49). இவருடைய மருமகன் ரெனி. இவர்கள் திருச்சிற்றம்பலம் அருகே துறவிக்காடு சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கணக்கன் தெருவை சேர்ந்த முத்தரசு (48).

இந்த நிலையில் ஓட்டல் நடத்தி வந்தவர்களுக்கும் மாஸ்டர் முத்தரசுவுக்கும் இடையே ஓட்டல் நடத்துவது மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த முத்தரசு விஷம் குடித்தார்.

தற்கொலைக்கு தூண்டியதாக...

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்தரசுவின் மனைவி நாகவல்லி கொடுத்த புகாரின் பேரில், திருச்சிற்றம்பலம் போலீசார் ஆனந்த் மற்றும் அவருடைய மருமகன் ரெனி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் ஆனந்தை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைமாக உள்ள ரெனியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்