மேட்டூர் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் திருடிய 2 பெண்கள் கைது

மேட்டூர் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-03 22:01 GMT

மேட்டூர்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் தர்ஷினி (வயது 23). மேட்டூருக்கு வந்த இவர் குமாரபாளையம் செல்வதற்காக பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். இதற்காக அவர் பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தார். அப்போது அவர் கைப்பையில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் மற்றும் செல்போன் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தர்ஷினி மேட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மேட்டூர் பஸ் நிலையத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது முஸ்லிம் பெண்கள் போல் பர்தா அணிந்து கொண்டு 2 பெண்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (34), மாரியம்மாள் (36) என்பதும், இவர்கள் 2 பேரும் தர்ஷினியிடம் பணம், செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்