கிரேனில் டயர் திருடிய 2 பேர் சிக்கினர்
கிரேனில் டயர் திருடிய 2 பேர் சிக்கினர்.;
தளி அடுத்த டி.சூலகுண்டா பகுதியில் உள்ள கிரானைட் குவாரியில் மேற்பார்வையாளராக பணிபுரிபவர் காவேரியப்பா (வயது 63). இவர் கடந்த 28-ந்தேதி கம்பெனியை பூட்டி விட்டு மறுநாள் காலை மீண்டும் பணிக்கு வந்தார். அப்போது கம்பெனியில் நிறுத்தியிருந்த கிரேனில், 2 டயர்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் தளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் டயர்களை திருடியது தேன்கனிக்கோட்டையை அடுத்த என்.கொத்தூரை சேர்ந்த பிரகாஷ் (27), பிரபாகர் (26) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.