ஓமலூரில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை-வணிக வளாக உரிமையாளர் கைது
ஓமலூரில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வணிக வளாக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.;
ஓமலூர்:
ஓமலூர் ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). வணிக வளாக உரிமையாளர். இவர் 15 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுமி என 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.