டாக்டரின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர் கைது
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் டாக்டரின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் நள்ளிரவில் டாக்டரின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அதிர்ச்சி
ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரை சேர்ந்தவர் டாக்டர் விநாயகமூர்த்தி. அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது அங்கு ஒரு மர்ம நபர் ஒளிந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யார் என்று கத்தி கூச்சலிட்டபோது மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
திருடும் நோக்கில் வீட்டின் மாடியில் வந்து ஒளிந்திருந்த மர்ம நபர் குறித்து டாக்டர் விநாயகமூர்த்தி ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். மேற்கண்ட மர்ம நபர் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
கைது
இதுதொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்.எஸ்.கே. நகரை சேர்ந்த முனியாண்டி மகன் பேக்கரி தொழிலாளியான மணிகண்டன் (வயது 36) என்பவரை கைது செய்தனர்.