லாட்டரி, குட்கா விற்ற 18 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு, குட்கா விற்றதாக 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணம் வைத்து சூதாடியதாக 9 பேர் பிடிபட்டனர்.

Update: 2023-10-15 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு, குட்கா விற்றதாக 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணம் வைத்து சூதாடியதாக 9 பேர் பிடிபட்டனர்.

லாட்டரி சீட்டுக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் லாட்டரி சீட்டுக்கள் விற்றதாக பாரூர், போச்சம்பள்ளி, கெலமங்கலம், ஊத்தங்கரை பகுதிகளை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.560 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அப்போது சூதாடிய பர்கூர், தேன்கனிக்கோட்டை, சிங்காரப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.550 பறிமுதல் செய்யப்பட்டது.

குட்கா விற்பனை

மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். இதில் குட்கா விற்றதாக கிருஷ்ணகிரி, ஓசூர், மத்திகிரி, சூளகிரி, பேரிகை, நாகரசம்பட்டி, தளி, ராயக்கோட்டை, சிங்காரப்பேட்டை, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,700 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்