குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 18 பேர் கைது

குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-14 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறதா? என அந்தந்த பகுதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, பாரூர், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, வேப்பனப்பள்ளி, மகாராஜகடை, சூளகிரி, தளி, அஞ்சட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் குட்கா விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,100 மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.300 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்