தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

சேலத்தில் தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-12 20:51 GMT

சேலம்

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 43). வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் கடந்த 10-ந் தேதி கருங்கல்பட்டி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் பிரகாசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,730-யை பறித்து சென்றனர். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பிரகாசிடம் பணம் பறித்தது கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (29), சண்முகம் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்