தலைவாசல் அருகேசரக்கு ஆட்டோவில் கன்றுக்குட்டியை கடத்த முயற்சி2 பேர் கைது

தலைவாசல் அருகே சரக்கு ஆட்டோவில் கன்றுக்குட்டியை கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-26 20:40 GMT

தலைவாசல்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேவியாக்குறிச்சி கிராம பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மாட்டு கன்றுக்குட்டி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி அதில் அந்த கன்றுக்குட்டியை ஆட்டோவில் வந்தவர்கள் ஏற்றி கடத்தி சென்றனர். இதைபார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சரக்கு ஆட்டோவை விரட்டி சென்றனர். நத்தக்கரை சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருந்தபோது அங்கு விரைந்து சென்ற ெபாதுமக்கள் கன்றுக்குட்டியை கடத்தி சென்ற சரக்கு ஆட்டோவை மடக்கி பிடித்து தலைவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள்,செங்கல்பட்டு மாவட்டம் முரப்பாக்கம் அருேக உள்ள கே.ஜே. நகரை சேர்ந்த ரவி (வயது 45), செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செங்குந்தர் பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த ராஜா (23) என தெரியவந்தது. மேலும் அவர்கள் கன்றுக்குட்டியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு ராணி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார். அவர்கள் கொண்டு வந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் கன்றுக்குட்டியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்