மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அமானிமல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் (வயது 34). லாரி டிரைவர். இவரிடம் அதே ஊரை சேர்ந்த சந்தோஷ் (27) விநாயகர் சிலை கரைப்பதற்காக லாரியை வாடகைக்கு கேட்டுள்ளார். வேறு வாடகை பேசி விட்டதால், வாடகைக்கு வர முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது உறவினர்களான மாதேஷ் (40), விக்ரம் (31), சரவணன் (27), காந்தி (28), சதீஷ் (23) ஆகியோருடன் வந்து லாரி கண்ணாடியை உடைத்து டிரைவர் வசந்திற்க்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வசந்த் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், மாதேஷ், விக்ரம், சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான காந்தி, சதீஷ் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.