லாட்டரி விற்ற 2 பேர் கைது

Update: 2023-09-02 19:30 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு போலீசார் மூங்கப்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் சிக்கார்த்தனஅள்ளி பகுதிகளில் ரோந்து சென்றனர். லாட்டரி சீட்டு விற்று 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அப்துல்கரிம் தெருவை சேர்ந்த சுபான் (வயது 61) சிக்கார்த்தனஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (56) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்