குருபரப்பள்ளி அருகேபொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது

Update:2023-07-28 01:00 IST

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி போலீசார் குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்ததில் குருபரப்பள்ளி அருகே உள்ள ஜிஞ்சுப்பள்ளியை சேர்ந்த அகர் நிவாஸ் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கைதான அகர் நிவாஸ் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி தாலுகா, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்