காரிமங்கலம் அருகேதொழிலாளி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

Update: 2023-07-10 19:00 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 31). தொழிலாளி. இவருடைய வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் காரிமங்கலம் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் பேகாரஅள்ளி கூட்டுரோடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (வயது 26) என்பதும், இவர் அருள் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருடியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 10 பவுன் நகையை மீட்டனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு தர்மபுரி களை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்