சாராயம் விற்றவர் கைது
முத்துப்பேட்டை அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டை;
முத்துப்பேட்டையை அடுத்த மங்கலூர் வடக்கு பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.