அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update:2022-08-10 21:37 IST


அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு மற்றும் தமிழ் சுவிசேஷ லுத்தரசன் திருச்சபை, தேசிய தலித் கிறிஸ்தவர்கள் பேரவை சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு டி.இ.எல்.சி. மேற்கு மண்டல கண்காணிப்பு ஆயர் கிறிஸ்டோபர் செல்லப்பா, புனித கத்தரீனம்மாள் ஆலய பங்குத்தந்தை ஹியாசிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலித், ஆதிவாசி துறை ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் சுந்தர்குமார் தொடக்க உரையாற்றினார். கிறிஸ்தவ சமூக நீதிப்பேரவை மாநில துணை செயலாளர் கிப்டன் டேவிட் பால், வில்சன், ராஜ் சாலமோன் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் ரவிசங்கர் பேசினார். முடிவில் டி.இ.எல்.சி. இளைஞர் அமைப்பு பொதுச்செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார். காருண்யா சாந்தசீலன், ஜோஸ்வா நிமிலன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்