கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் அர்ஜூன் சம்பத் பேட்டி;

Update:2022-07-19 21:44 IST

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று நாமக்கல்லில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தை பார்வையிட்டார். அங்குள்ள கவிஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- இந்து மக்கள் கட்சி சார்பில் சுதந்திர இந்தியாவின் அமுதவிழா மற்றும் 75-ம் ஆண்டு பவளவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்களை பார்வையிட்டு வருகிறோம். கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் மக்கள் அதிகாரம் மற்றும் திராவிடர் கழகம் ஈடுபட்டு இருப்பது தெளிவாகி உள்ளது. எனவே அந்த இரு அமைப்புகளையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும். மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். பெரியார் பல்கலைக்கழக தேர்வில் சாதி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டு உள்ளது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி எம்.பி. செந்தில் பூமிபூஜை நிகழ்ச்சியில் மத உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே வந்தே மாதரம் யாத்திரை குழுவினர் அர்ஜூன் சம்பத் தலைமையில் திருச்செங்கோடு வந்தனர். அங்கு பாரதமாதா உருவப்படத்திற்கு அர்ச்சனை செய்து ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விடுதலைப் போராட்ட வீரர் காசி விஸ்வநாதர் முதலியார் காளியண்ணகவுண்டர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் ராசிபுரத்தில் உள்ள விடுதலை களம் கட்சி அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் ராசிபுரத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி வரதராஜூலு நாயுடு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்