குடிபோதையில் தகராறு செய்தகணவரை அடித்துக்கொன்ற மனைவி

கடையம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்தார்.

Update: 2023-01-28 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்தார்.

கட்டிட தொழிலாளி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் டி.ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 48), கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி திரவியக்கனி (44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

பிணமாக கிடந்தார்

நேற்று காலையில் வீட்டின் அருகில் பாலசுப்பிரமணியன் பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கடையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு (ெபாறுப்பு) தெய்வம், கடையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாலசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக்கொலை

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலசுப்பிரமணியனை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

பாலசுப்பிரமணியனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவும் அவர் குடிபோதையில் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். மேலும், திரவியக்கனியை அவதூறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த திரவியக்கனி அருகில் கிடந்த கல்லால் பாலசுப்பிரமணியன் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயங்கிய அவரை வீட்டின் ெவளியே ேபாட்டுவிட்டார். இந்த சம்பவத்தில் பாலசுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மனைவி கைது

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, திரவியக்கனியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடையம் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை அவரது மனைவியே அடித்துக் கொலை செய்த பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்