சோளிங்கர் நகராட்சியில் பகுதி சபை கூட்டம்
சோளிங்கர் நகராட்சியில் பகுதி சபை கூட்டம் நடந்தது.;
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி 8-வது வார்டில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பகுதி சபை கூட்டம் வார்டு உறுப்பினர் டி.கோபால் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி இளநிலை உதவியாளர் எபினேசன் முன்னிலை வகித்தார். தேர்வு செய்யப்பட்ட பகுதி சபை உறுப்பினர்களான சுந்தர், முருகன் லட்சுமி, ஜெயந்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். 8-வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.