செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா?

வேலூர் மாங்காய் மண்டியில் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-04-19 17:41 GMT

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாங்காய் மண்டி, குடோன், கடைகளில் ஆய்வு செய்து செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டிருந்தால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ், சிவமணி ஆகியோர் வேலூர் மாங்காய் மண்டியில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள கடைகளில் கார்பைடு கற்கள் மூலம் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர். மேலும் கடைகளுக்கு உரிமம் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகள் உரிமம் வாங்காதது மற்றும் புதுப்பிக்காதது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடை உரிமையாளர்களிடம் உடனடியாக கடை உரிமம் வாங்கவும், புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அனுமதி வழங்கிய சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட எத்திலீன் கியாஸ் மூலம் வியாபாரிகள் பழுக்க வைக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்