கட்டிட மேஸ்திரியின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச் சாவு அடைந்த கட்டிட மேஸ்திரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Update: 2023-05-17 12:18 GMT

வேலூர், ஓல்டு டவுன், உத்திரமாதா கோவில் தெரு பின்புறத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரசாந்த் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 14-ந் தேதி வேலைக்காக மோட்டார்சைக்கிளில் பள்ளிகொண்டா நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் பிரசாந்த் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரசாந்த்தை மீட்டு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரசாந்த் நேற்று மூளைச்சாவு அடைந்தார். அதைத்தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன்பேரில் பிரசாந்தின் இதயம், நுரையீரல் எம்.ஜி.எம். ஆஸ்பத்திரிக்கு சாலை மார்க்கமாக எடுத்துச் செல்லப்பட்டது. கல்லீரல், இடதுபுற சிறுநீரகம் ராணிப்பேட்டை சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கும், வலது புற சிறுநீரகம் மியாட் ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்