அம்பு போடும் நிகழ்ச்சி

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி குதிரை வாகனத்தில் சாமி வீதிஉலா நடந்தது

Update: 2022-10-05 18:45 GMT

வேதாரண்யம்:

நவராத்தி விழாவையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி சாமிகள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. அதனை தொடர்ந்து தோப்புத்துறை ெரயில்வே கேட்டுக்கு முன்புறம் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் தோப்புத்துறை அபிஷ்டபெருமாள் கோவில் முன்பு குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து கிணற்றடி பகுதியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. தோப்புத்துறை கைலாசநாதா் கோவிலிலிருந்து சுப்பிரமணியசாமி கேடயத்தில் எழுந்தருளி கிணற்றடி பகுதியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்