அரங்குளநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா

திருவரங்குளத்தில் உள்ள அரங்குளநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடிேயற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-05-24 18:49 GMT

அரங்குளநாதர் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க சோழர்கால பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதேேபால் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கோவில் மாவிலை தோரணங்கள், வாழை மரக்கன்று கட்டி அலங்கரிக்கப்பட்டு மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டது.

கொடியேற்றத்துடன் தொடங்கியது

இதையடுத்து கோவிலில் உள்ள கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் பசு வாகனம் பொறிக்கப்பட்ட கொடியை கொடிமரத்தில் ஏற்றி வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் கோவில் தேவஸ்தான அலுவலர் தட்சிணாமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து தினமும் காலை-மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற உள்ளது. 1-ந் தேதி தேரோட்டமும், 2-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்