அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 6 மாவட்டங்களுக்கு விரைந்தனர்

புயல் முன்னெச்சரிக்கை மீட்பு பணிக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 6 மாவட்டங்களுக்கு விரைந்தனர்.

Update: 2022-12-06 14:22 GMT

தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம், வட தமிழகத்தை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் சென்னை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர். கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 6 குழுவினர் அதி நவீன மீட்பு கருவிகளுடன் விரைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்