மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்லில் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் 17-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-03-10 18:45 GMT

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணை பேராசிரியர் மற்றும் தலைவரான அழகுதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு ஒருங்கிணைந்த பண்ணை மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றி மற்றும் தோட்டக்கலை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி மீன்களுக்கு தேவையான உணவு விகிதாசாரத்தை குறைத்து உற்பத்தி திறனை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்தும், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு மற்றும் நோய் நீர் மேலாண்மை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளின் மீன் வளர்ப்புக்கு மானியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள், மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்