தேர்வை தன்னம்பிக்கையுடன் அணுகுங்கள் - 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து கூறியுள்ளார்.

Update: 2024-03-25 15:14 GMT

கோப்புப்படம் 

சென்னை,

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடங்கி, ஏப்ரல் மாதம் 8-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

"நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினா தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம்; பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும்.

அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை" இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்