தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு தேர்வான 11 மாணவ, மாணவிகள் பாராட்டு
தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு தேர்வான 11 மாணவ, மாணவிகள் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
இந்திய பள்ளிக்குழுமம் சார்பில் கடந்த 11 மற்றும் 12-ந்தேதிகளில் சேலம் மாவட்ட மகாத்மாகாந்தி விளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான மல்யுத்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெறும் மல்யுத்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 வயதிற்குட்பட்ட பிரிவில் பிரியதர்ஷினி, சவுமியா, குணபாக்கியா, பாலாஜி, மொழிவாணன் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் கிருஷ்ணவர்ஷினி, சம்யுக்தா, ஹரிஹரன், 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தாணுஸ்ரீ, மோனிஷா, முகேஷ்அம்பானி ஆகிய 11 பேர் தங்கப்பதக்கம் வென்று மத்திய பிரதேசம் மாநிலம், இடிசா நகரில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கலெக்டர் பிரபுசங்கர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.மேலும் ஊக்கத்தொகையாக 11 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் வழங்கினார்.