அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

Update: 2023-05-22 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைவர் வெள்ளையன் செட்டியார் தலைமை தாங்கினார்..

பள்ளியின் செயலர் வெங்கடாசலம் செட்டியார், பொருளாளர் அம்மையப்பன் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை வள்ளியம்மை வரவேற்றார்..

இதில் பிளஸ்-2 தேர்வில் 573 மதிப்பெண் பெற்ற துர்காதேவி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 485 மதிப்பெண் பெற்ற மீனாட்சி உள்ளிட்ட 7 மாணவ-மாணவியர்களுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் பொது மேலாளர் திருஞானசம்பந்தம் பரிசுகள் வழங்கியும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

விழாவில் ஆசிரியர் லியோ நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்