ஓ.பன்னீர்செல்வம் அணியில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்.

Update: 2022-07-27 19:08 GMT

சென்னை,

முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், என்.ஆர்.சிவபதி, முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வைகை செல்வன், பரமசிவம், ஓட்டுனர்கள் அணிச்செயலாளர் சங்கரதாஸ் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக பி.எஸ்.சிவா, தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளராக சதீஷ், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராக டி.ஆர்.முரளி, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளராக எஸ்.கோதண்டன், திருவாரூர் மாவட்ட செயலாளராக சிவ நாராயணசாமி, மாநில வக்கீல் பிரிவு இணை செயலாளராக என்.மனோகரன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக ராஜசேகரன், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக ரத்தினசபாபதி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக கலைச்செல்வம் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்